மதிய உணவுத் திட்டம்

மணியடித்ததும் வேக வேகமாக ஓடி இடத்திற்கு வருவோம்
அவிச்ச முட்டை கிடைக்காமல் போய்விடுமோ
என்கிற பயத்தில் ..

முதல் இடத்தை யார் பிடிப்பது? 
என்று எங்களுக்குள் சண்டை நடக்கும்.
என்றைக்கும் போல் குழைந்து போன சோறும், தாளித்துக் கொட்டிய வெங்காயம் மிதக்கும் பருப்புக் குழம்பும் அமுதமாய் இருக்கும் எங்களுக்கு...

சிலநாளில், 
அவித்த முட்டையைப் புத்தகப்பையிலே வைத்து வீட்டுக்கு எடுத்துச் செல்வோம் 
அது பையிலேயே ஆம்லேட்டாய் மாறிவிடும் வீட்டுக்குச் செல்வதற்குள்…

சட்டைப் பையில் போட்டு பச்சைப்பயிறு தின்றதெல்லாம் நினைத்தாலே இனிக்கிறது 

இப்பொழுது வேலை பார்க்கும் இடத்தில் அதே சுவையில் அவித்த முட்டை கிடைக்கும் போதெல்லாம் மனசு ஏங்குகிறது
 "அதே வெங்காயம் மிதக்கும் பருப்புக் கொழம்புக்கு"

கருத்துகள்