தமிழ் இனிது



அற்றைத் திங்கள் பொதிகையில்

     உதித்த தெங்கள் தமிழி

ஒற்றைக் காலில் நிற்குமவள்

   பிடிவா தமான அழகி

மூன்று கொம்பு முளைத்ததனால்

      அடக்க முடியா வீரம்

மூண்டு வந்த பகையினையே 

      முட்டிச் சாய்க்கும் தூரம்

ஆய்தம் ஒன்று ஏந்திநிற்கும்

      மாய அணங்கு அவளை

நோய்கள் தீண்ட வந்தாலும் 

     என்றும் இல்லை கவலை 

அகரம் முதலாய்க் கொண்டதுதான் 

     சிகரம் ஏறி நிற்கும்

நகரம் கிராமம் எங்கேயும் 

     "ழகரம்" சிறப்பைக் கூட்டும்

ஏகம் பநாதன் பாடியதால் 

     இகமும் பரமும் சேரும்

முகநூல் புலனம் தானமர்ந்து 

    அகமும் புறமும் பேசும் 

திணிக்கும் மொழியை விரும்பாமல் 

    இனிக்கும் அவளைப் படித்தால்

மணக்கும் திசைகள் எங்கேயும்

    இனிதாய் வாழும் தமிழே.


கருத்துகள்