உதயத்தூர் முத்தாரம்மன்


தூக்குவாளி மூடிவரை சோறடைத்து வண்டியேறி
மூக்குவாளி போட்டஉனை நாடிவந்து போற்றிடுவோம்
சீக்கிரமாய் எங்களுக்கு நல்லவழி தந்துதவி
ஆக்கிடுவாய் முத்தாரம் மா.



காத்தாடி நூறு சுழல்கின்ற இவ்வூரில்
"ஆத்தா" வியர்க்கா துனக்கு! - அதுபோல்
இதயத்தில் நீநின்று எப்போதும் காப்பாய்
உதயத்தூர் முத்தாரம் மா.


கருத்துகள்